28 ஆண்டுக்கு பின் கோப்பையை ஏந்திய மெஸ்ஸி- கதறி அழுத நெய்மாருக்கு ஆறுதல்!
கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி செய்த விஷயம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உலக புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான கோப்பா அமெரிக்கா போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று இறுதி போட்டியில் பிரேசில் – அர்ஜெண்டினா அணிகள் மோதின.
இதையடுத்து, பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் நெய்மாரும், அர்ஜெண்டினாவின் மெஸ்சியும் ஒரே போட்டியில் எதிரெதிராக மோதுவதால் எதிர்பார்ப்பு பலமாக இருந்தது.
இதனால், இரு அணிகளும் ஈடு கொடுத்து ஆடியதால் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி மரியாவின் கோலை தவிர்த்து வேறு கோல்கள் பதிவாகவில்லை. இதனால் 1-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜெண்டினா.
இதுவரை கோப்பா அமெரிக்காவில் 17வது முறையாக அர்ஜெண்டினா வெல்லும் கோப்பை இதுவாகும். கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜெண்டினா முதல்முறையாக கோப்பையை வெல்கிறது.
மேலும், கடந்த 17 ஆண்டுகளாக அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்சி விளையாடி வரும் நிலையில் முதல்முறையாக அவர் தலைமையில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றுள்ளது.
பிரேசிலின் அதிர்ச்சி தோல்வி ரசிகர்களையே உலுக்கிய நிலையில் நட்சத்திர வீரர் நெய்மார் கதறி அழுதுள்ளர். அப்போது அவரை மெஸ்ஸி ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.
மெஸ்ஸி கோப்பையை வென்று கொடுத்ததை விட சக அணி கேப்டனுக்கு ஆறுதல் தெரிவித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#GOAT
— ABDUL BASIT (@AbdulBa66001506) July 11, 2021
The way messi sides his own teammate to hug Neymar is so heartening.❤️ pic.twitter.com/iWyr0mAXoN