இறந்த நிலையில் கரையொதுங்கிய கடற்கன்னி? நீடிக்கும் மர்மம்
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் பப்புவா நியூ கினியா நாட்டில் கடற்கன்னி ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கிய தகவல் வைரலாகி வருகின்றது.
கடற்கரையில் இறந்த கடற்கன்னியா?
பொதுவாக கடற்கன்னிகள் போன்ற உயிரினம் இருப்பதாகவும், இவை மனிதர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவுகின்றது என்ற எண்ணம் குழந்தைகளிடையே அதிகமாக இருக்கின்றது.
கடலுக்கடியில் புதைந்துள்ள ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியமாக இருந்தாலும், கடற்கன்னிகள் குறித்து நாம் திரைப்படங்களில் அவதானித்துள்ளோம்.
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. இதன் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி. இங்கு பிஸ்மார்க் கடற்கரை ஒன்றில் கடல்கன்னி போன்ற உருவத்துடன் மர்ம உயிரினம் கரையெதுக்கியுள்ளது.
ஆய்வில் இவை கிளாப்ஸ்டர் என்று அழைக்கப்படும் உயிரினம் என்று கூறப்படுகின்றது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த "கிளாப்ஸ்டர்" உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றி தெரிந்துக்கொள்வது மிகவும் கடினம் எனவும் ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.
தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின்கள் போன்ற உயிரின வகைகள் இவ்வாறு கரையொதுங்கும் என்றும், குறித்த கிளாப்ஸ்டர் ஒரு திமிங்கில வகையாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |