ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
புதன் ஜுன் 22ல் கடக ராசிக்கு செல்வதால் எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
புதன் பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களில் புதன் கிரகத்திற்கு முக்கிய இடம் உண்டு. புத்தி கூர்மை, சாதுரிய பேச்சு, வணிக நுணுக்கம், தகவல் தொடர்புத் திறன்கள் இவற்றிற்கு அதிபதியாக விளங்குகின்றார்.
புதன் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தினை மாற்றும் போது சில ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் ஜுன் 22ல் புதன் கடக ராசிக்கு செல்கிறார். புதனின் ஆசியோடு அசுர வளர்ச்சியடையும் மூன்று ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
இந்த மாற்றத்தால் மேஷ ராசியினர் குடும்பம் மற்றும் வீட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். இந்த காலத்தில் இவர்கள் நிறைய வழியில் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளனவணிக வேலை பார்ப்பவர்களுக்கு புதிய முன்னேற்றத்துக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி உங்களுக்கு மற்றவர்களிடமிருந்து நிறைய வாய்ப்புகள் வரும்.
இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை மற்றுவர்களிடம் தைரியமாக சொல்லுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் தருணமாக இது இருக்கும்
இந்த பெயர்ச்சியால் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் . அது மட்டுமின்றி தேர்வு அல்லது போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

மிதுனம்
இந்த பெயர்ச்சியால் உங்களின் பேச்சு இனிமையாக இருக்கும். இதனால் உங்களின் ஆளுமை திறன் மேம்படும். நீங்கள் சொல்லும் தகவல்கள் தான் உங்களுக்கு பலமாக இருக்கும்.
நீங்கள் இந்த காலகட்டத்தில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். அது மட்டுமின்றி உங்கள் உறவுகளை மிகவும் உறுதியானதாகவும் இருக்கும்.
உங்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கிறதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலத்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து அல்லது புதிய வாகணம் ஒன்றை வாங்குவீர்கள்.
நீங்கள் பார்க்கும் வேலையில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதனால் உங்கள் சம்பளம் அதிகரிக்கும். இந்த மாற்றத்தால் உங்கள் உடல்நிலையில் எந்த பாதிப்பும் வராது. நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பீர்கள்
துலாம்
இந்த காலம் உங்களுக்கு சாதகமான காலமாக அமையப் போகிறது. இதனால் நீங்கள் நீண்ட காலம் காத்திருந்து வேலை அல்லது தொழில் உங்களுக்கு கிடைக்கும்.
இது தொடர்பான நல்ல செய்தியை நீங்கள் கேட்பீர்கள். நீங்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக அமையப்போகிறது. இதனால் நீங்கள் மரியாதையாக இருப்பீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |