புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், கல்வி, பேச்சுத்திறன், வியாபாரம் மற்றும் அறிவாற்றலின் காரணியாகக் கருதப்படுகிறார். மேலும், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் புதன் விளங்குகிறார்.
குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடிய கிரகமாகவும் இவர் கருதப்படுகிறார். தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் புதன், வரும் செப்டம்பர் 07 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னிக்குள் நுழைகிறார்.

சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு புதன் தனது சொந்த ராசிக்கு திரும்புவதால், இந்தப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. புதன் தனது சொந்த ராசியில் வலிமையாக அமரும்போது பத்ர மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது.
இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் அறிவு, பேச்சுத்திறன், தொழில், வியாபாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான பலன்களை வழங்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
மேஷம்

மேஷ ராசியின் 6-ம் வீட்டில் புதன் சஞ்சரித்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும்.
வேலையில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி, ஏற்கனவே செய்த முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.
வணிகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம்

சிம்ம ராசியின் 2-ம் வீட்டில் புதன் சஞ்சரித்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
புதிய தொழில் தொடங்கும் முடிவையும் எடுக்கலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு

தனுசு ராசியின் 10-ம் வீட்டில் புதன் சஞ்சரித்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் நீண்டகால கடின உழைப்புக்கு பலன் கிடைப்பதுடன், நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும்.
ஏற்கனவே செய்த முதலீடுகளில் லாபம் கிடைக்கும்; புதிய முதலீடுகளும் நல்ல வருமானத்தைத் தரலாம். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.குறிப்பாக புதிய தொழில் ரீதியில் உச்சகட்ட முன்னேற்றம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |