மெழுகுச் சிலை போல போஸ் கொடுத்த ஜனனி - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜனனி, தற்போது அழகிய சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சேலையில் மெழுகுச் சிலை போல் அழகாக காட்சியளிக்கும் ஜனனியின் கியூட் போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

நடிகை ஜனனி
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜனனி.தனது இயல்பான பேச்சு, க்யூட்டான நடவடிக்கைகள் மற்றும் அழகால் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவருக்கான ரசிகர் பட்டாளம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜனனிக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் ஜனனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதன் மூலம் சினிமா ரசிகர்களிடையேயும் ஜனனிக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.

இந்நிலையில், ஜனனி தற்போது கதாநாயகியாகவும் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். நிழல் என்ற திரைப்படத்தில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யனுக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜனனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அழகிய சேலையில், நேரத்தில் கவர்ச்சியான தோற்றத்தில் ஜனனி வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |