2022 இல் பண வரவை மூட்டை மூட்டையாக அள்ளப் போகும் 4 ராசிகள்... கூரைய பிச்சிக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்ட போகுது?
புதன் பகவான் நேர்மறை நகர்வு, வக்ர பெயர்ச்சி நடந்து மீண்டும் நேர்மறை பெயர்ச்சி என 2022 ஆண்டின் முதல் காலாண்டு வரை நடக்கிறது.
இந்த காலத்தில் எந்த ராசிகளுக்கெல்லாம் சுக போகங்கள், வசதிகள் அதிகரிக்கும், திறமையால் ஜொலிப்பார்கள் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
வேலை, தொழில் மூலம் தன லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். மூட்டை மூட்டையாக பணத்தை சேமித்து வைத்து கொள்ளும் காலம் இது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக அமையும்.
ரிஷபம்
மகர ராசியில் புதன் சஞ்சரிப்பதும், பின்னர் வக்ர நிலை அடைவதால் ரிஷப ராசியினர் பல வழிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்தவும்.
தனுசு
தனுசு ராசிக்கு 2ம் இடமான மகரத்தில் புதனின் சஞ்சாரம், வக்ர நிலை நிகழ்வதால் பல விதத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணப் பரிவர்த்தனை, வணிகம் போன்ற விஷயங்களுக்கு இந்த காலம் சிறப்பான பலனைத் தரும்.
மகரம்
நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். உங்களின் வணிகம், வேலையின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், அதில் அசட்டு கவனமின்மை தவிர்க்கவும்.
மீனம்
நிதிநிலை மேம்படுத்துவதற்கான காலம். நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் நல்ல முன்னேற்றமும், லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் வேலையில் முழு கவனத்துடன் பணியாற்றப் பதவியும், பாராட்டும் கிடைக்கும். சிறியளவிலான முதலீடுகள் மூலம் உங்களுக்கு நல்ல லாபத்தைப் பெறக்கூடிய காலமாக இருக்கும்.