ஒரு வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட புதன் பெயர்ச்சி... பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள் யார்?
புதன் கிரகத்தின் இடமாற்றத்தில் 3 ராசியினர் பெரும் அதிர்ஷ்டத்தினை அடைய உள்ளனர்.
புதன்
புதன் கிரகம் நவகிரகங்களின் இளவரசன் என்று அழைக்கபடுகின்றது. தற்போது சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் பயணித்து வரும் நிலையில், கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றிற்கு காரணமாகவும் இருக்கின்றார்.
மிகவும் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக் கூடியவர் தான் புதன் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் புதன் கிரகம் நல்ல நிலையில் காணப்பட்டால், நல்ல பேச்சாற்றல், நல்ல புத்திசாலி, படிப்பில் சிறந்தவர்களாக இருக்க முடியும். ஆகவே ஒருவரின் ஜாகத்தில் புதனின் நிலை மிகவும் முக்கியமானதாகும்.
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், ஒரு வருடத்திற்கு பின்பு சொந்த ராசியான மிதுன ராசிக்குள் ஜுன் 24ம் தேதி(நாளை) நுழையவுள்ளார்.
இந்தத் தருணத்தில் புதன் கிரகத்தினால் 3 ராசியினர் பெரும் ராஜயோகத்தினை அடைய உள்ளனர். அந்த ராசிகளைக் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
புதன் கிரகமானவது ரிஷப ராசியின் 2வது வீட்டிற்கு செல்வதால், திடீர் பண வரவு மட்டுமின்றி வேறு இடத்தில் கிடப்பில் கிடைக்கும் பணமும் நிச்சயம் வந்து சேரும்.
வேலையில் நல்ல முன்னேற்றம், சம்பள உணர்வு ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் தொடங்கலாம். ஆக மொத்தம் எடுத்த காரியம் அனைத்தும் மங்களராகமானதாக முடியுமாம்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதியான புதன், தற்போது 10ஆவது வீட்டிற்கு செல்வதால், தொழில் மற்றும் வியாபாரததில் நல்ல வெற்றி ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் புதன் 5 வது வீட்டிற்கு செல்வதால், இந்த காலம் மிகவும் சிறப்பாகவே இருக்கும். ஊடகம், ஆன்மீகம் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் பொற்காலமாகவே இருக்கும்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நல்ல பண ஆதாயத்தை பெறலாம். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |