புதன் பெயர்ச்சி 2023: சில தினங்களில் பேரதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள்
சில தினங்களில் இடம் மாறும் புதன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தினை பெறும் 5 ராசிகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புதன் பெயர்ச்சி
பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இயல்பான ஒன்றாக இருந்தாலும், சில கிரகங்கள் மட்டும் அதிசாரம், வக்ர பெயர்ச்சியினை மேற்கொள்ளும் கிரகங்களாக இருக்கின்றது.
கிரகங்களைப் பொறுத்தவரை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்மாறிக் கொண்டே இருக்கும்... இதனை முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்பட்டு வருகின்றது.
தற்போது மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சியில் இருக்கும் புதன் கிரகம், வரும் 15ம் தேதி காலை 8.45 மணிக்கு நேரடி பெயர்ச்சியாக மாறும் நிலையில், மிகப்பெரிய மாற்றத்தினையும் கொண்டு வருகின்றது.
இந்த புதன் பெயர்ச்சியில் ஜுன் 7ம் தேதி வரை மேஷ ராசியில் புதன் சஞ்சரிக்கின்றது. பின்பு அதிலிருந்து ரிஷப ராசியில் சஞ்சரிப்பார். தற்போது ஏற்படும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினை தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
புதனின் நேரடி சஞ்சாரத்தினால் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில், மற்றும் பண ரீதியில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்திலும் அதிர்ஷ்டத்தினை பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல பலன் கிடைக்கும். பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலையில், ஆரோக்கியத்திலும் சிறப்பான மாற்றங்கள் இருக்கும். தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் நல்ல மாற்றத்தினை பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியில் பொருளாதார பலன்களை பெறுவார்கள். வேலையில் பதவி உயர்வு மட்டுமின்றி சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முழு பலனை பெறுவீர்கள். மேலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த நேரத்தினை மிகவும் மகிழ்ச்சியாக கழிப்பதுடன், அதிக பலனையும் பெறுவார்கள். புதனின் நேரடி சஞ்சாரம் வாழ்வில் அன்பு பெருக வைக்குப்பதுடன், வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும்.
கும்பம்
இந்த பெயர்ச்சியில் மகத்தான வெற்றியை பெறும் கும்ப ராசியினருக்கு விரும்பிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். இது மட்டுமின்றி சொத்துக்கள் சேர்ப்பதும், பண பலனும் அதிகரிக்கும்.