இரண்டு நாட்களில் புதன் பெயர்ச்சி - கோடியில் புரளப்போகும் ராசிகள் எவை?
ஜோதிடத்தில் தற்போது புதன் பெயர்ச்சி ஆரம்பமாகிறது. இந்த புதன் பெயர்ச்சியில் சில ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகின்றது.

புதன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனான புதன் ஒருவரது ஜாதகத்தில் புத்தி கூர்மை, தகவல் தொடர்பு திறன், கல்வி மற்றும் வணிக வெற்றிக்கு காரணமாக இருக்கிறார்.
புதன் பொதுவாக 21 நாட்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். அந்த வகையில் இந்த மே மாதத்தில், புதன் ஒரே வாரத்தில் மூன்று முறை மாற்றமடைகிறார்.

அதாவது மே 7ம் தேதி புதன் பகவான் பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். மே 13ம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். மே 15ம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
இந்த மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட நான்கு ராசிகள் ராஜயோகத்தை கொத்தாக அள்ளப்போகின்றது.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி குடும்பத்தில் வந்த பிரச்சனைகளை நீக்கும். உங்கள் துணையுடன் நெருக்கம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய வருமான தேடி வரும். பணம் பல வழிகளிலும் வரும். புதன்கிழமைகளில் பசு மாட்டிற்கு அருகம்புல் அல்லது பச்சை நிறக் காய்கறிகளை உணவாக வழங்கினால் உங்கள் குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் வறுமை நீங்கும்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வீண் செலவுகள் குறையும். புதிய தொழிலைத் தொடங்க இதுவே மிகச்சரியான தருணம். நீண்ட நாள் கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நலப் பாதிப்புகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். புதன்கிழமைகளில் 'விஷ்ணு சகஸ்ரநாமம்' கேளுங்கள் அல்லது பாராயணம் செய்யுங்கள். இயலாதவர்கள் "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி
- கன்னி ராசிக்கு அதிபதியான புதன் பலமான நிலையில் இருப்பதால், உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணியிடங்களில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட்டில் ஏற்கனவே செய்த முதலீடுகள் லாபத்தை தரும்.
கும்பம்
- கும்ப ராசியினருக்கு நிதி ரீதியாக பலன் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனமான முடிவுகள் பெரிய லாபத்தை கொடுக்கும். உடன் பிறந்தவர்களுடனான பிணைப்பு வலுவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. துணிச்சல் அதிகரிக்கும். உங்கள் பேச்சாற்றல் மூலம் கடினமான காரியங்களையும் எளிதில் சாதிப்பீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).