புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!
ஜோதிடத்தில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும் கிரகங்கள் ஆற்றல் மிக்க கிரகங்களின் இணைவால் ஏற்படும் அரிய யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அவற்றில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுவது நவபஞ்சம யோகம். கிரகங்களின் இளவரசரான புதனும், கர்ம காரகனான சனியும் சிறப்பு அமைப்பில் இருப்பதால் இந்த யோகம் ஜூன் 22 அன்று (நாளை) உருவாகிறது.

புதன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியடையும் நிலையில், சனி மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் இடங்களில் அமைவதால் நவபஞ்சம யோகம் உருவாகிறது.
இந்த கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் வழங்கும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக நிதி நிலையில் பாரிய ஏற்றம் உண்டாகப்போகின்றது.
கடந்த சில மாதங்களாக எடுத்த முயற்சிகள் இப்போது பலன் தரத் தொடங்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கி, நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பூர்வீக சொத்து, முதலீடு அல்லது பங்குச் சந்தை மூலம் நிதி ஆதாயம் கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
நீண்டகால பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனதில் உற்சாகமும் செயல்திறனும் அதிகரிக்கும். வருமானத்துக்கான புதிய வழிகள் திறக்கும்.
குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.பல துறைகளில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை கொடுக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் எதிர்பாராத நன்மைகளை கொடுக்க காத்திருக்கின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். பொருளபாதாரம் முன்னரை விட சிறப்பாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கலாம். பணவரவு அதிகரிக்கும். உடல்நலம் நன்றாக இருப்பதால் அனைத்து பணிகளையும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |