துலாம் ராசியில் புதன் வக்ரம்: இந்த ராசிகளின் தொழில் வாழ்க்கையில் இனி பொற்காலம் தான்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவ கிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, பேச்சு, வணிகம் மற்றும் தொழில் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, அக்டோபர் 26ஆம் தேதி துலாம் ராசியில் புதன் தனது வக்ர இயக்கத்தைத் தொடர உள்ளார்.

துலாம் ராசியில் புதனின் வக்ர இயக்கம் காரணமாக, தொழில் மற்றும் வணிகம் தொடர்பான விடயங்களில் பெருமளவில் சாதக மாற்றங்கள் நிகழும்.
இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் சாதகமாக அமையக்கூடும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு துலாம் ராசியில் புதன் சஞ்சரிப்பது தொழில் மற்றும் உறவுகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
உயர் அதிகாரிகள், சக ஊழியர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் பணியில் முன்னேற்றம் ஏற்படலாம். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன், வேலையில் புதிய உயரத்தையும் அடைய வாய்ப்புகள் உருவாகும்.
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்டகாலமாக இருந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதுடன், புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் அமையும். குழந்தைகள் தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ரப் பெயர்ச்சி புதிய வேலை வாய்ப்புகளைத் தரக்கூடும். பணியிடத்தில் அவர்களின் தகவல் தொடர்புத் திறன் மற்றும் தொழில்முறை அணுகுமுறைக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலை மாற்றம் அல்லது புதிய பொறுப்பை ஏற்பது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றமடையலாம். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகளும் வெற்றிகரமாக முடிவடையக்கூடும்.
நிதிநிலை மேம்படுவதால் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை அனுபவிப்பதற்கான சூழல் உருவாகும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு துலாம் ராசியில் புதனின் சஞ்சாரம் அதிர்ஷ்டம், உயர்கல்வி, பயணம் மற்றும் தொழில்முறைத் தொடர்புகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். நிதிநிலை மேம்படுவதுடன், இதுவரை இருந்த கஷ்டங்களும் படிப்படியாக நீங்கும்.
முயற்சிகளுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதுடன், வியாபாரம் மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் காணப்படுகின்றது.
புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கும் இது சாதகமான காலமாக அமையலாம். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |