3 தடவை வக்ர நிலையில் புதன்- 2026-ல் கொடிகட்டி பறக்கும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்ற பிறக்கும் 2026 ஆம் ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்களை தரப்போகிறது.
ஏனெனின் கிரகங்கள் தன்னுடைய ராசியை மாற்றும் பொழுது அதன் பலன் அனைத்து ராசிகளில் பிறந்தவர்களுக்கும் இருக்கும். எவ்வளவு கஷ்டங்களை பார்த்தாலும் சிலரின் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலமே வராமல் இருக்கும்.
இது போன்ற பிரச்சினைகளில் உள்ளவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சிறப்பான பலன்களை தரப்போகிறது. கிரகங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன் அடுத்த வருடம் 3 தடவைகள் தன்னுடைய நிலையில் இருந்து பெயர்ச்சியடைவார்.
புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரராக பார்க்கப்படும் புதன் பெயர்ச்சியடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையிலும் இருக்கும்.
அந்த வகையில், பங்குச் சந்தை, லாட்டரி போன்ற நிதி சார்ந்த விடயங்களில் கொடிக்கட்டி பறக்கப்போகும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
2026-ஆம் ஆண்டு பலன்கள்

மிதுன ராசி
- மிதுன ராசியின் அதிபதியாக பார்க்கப்படும் புதன் கிரகம், 2026 ஆம் ஆண்டில் 3 தடவைகள் வக்ர நிலையில் பயணிக்கப்போகிறார். இந்த மாற்றத்தின் தாக்கம் வியாபாரங்கள் செய்பவர்களுக்கு அமோக வரவை தரும். வருமானம் அதிகரிப்பு காரணமாக ஆடம்பர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ரிஷப ராசி
- 2026 ஆம் ஆண்டில் 3 முறை வக்ர நிலையில் பயணிக்கும் புதன் பகவான் ரிஷப ராசியினர் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வரப்போகிறார். இவ்வளவு நாட்களாக வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று தைரியமாக உழைக்க ஆரம்பிப்பார்கள். நல்ல லாபமும் இவர்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் தாமதிக்காமல் ஓடி விடுங்கள். ஏனெனின் இதுவே உங்களுக்கு சிறந்த நேரம்.
கும்ப ராசி
- புதன் 2026 ஆம் ஆண்டில் 3 முறை வக்ர நிலையில் பயணிக்கும் பொழுது புதிய வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கவில்லை என கவலையாக இருப்பவர்களுக்கு இனி மகிழ்ச்சி தான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |