புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம் : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!
ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெற உள்ளன. இவை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, ஜூலை 07, 2026 முதல் ஆகஸ்ட் 05, 2026 வரை புதன் மிதுன ராசிக்கு பெயர்வதால் சக்திவாய்ந்த 'பத்ர ராஜயோகம்' உருவாகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் தனது சொந்த ராசியிலோ, உச்ச ராசியிலோ அல்லது வலுவான நிலையில் இருக்கும்போது இந்த யோகம் உருவாகும். தற்போது புதன் வக்ர நிலையில் இருந்தாலும், இந்த காலம் குறிப்பிடத்தக்க பலன்களை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
அனைத்து ராசிகளும் இதன் தாக்கத்தை உணர்ந்தாலும், சில ராசிக்காரர்கள் கூடுதல் நன்மைகளைப் பெறப்போகின்றார்கள் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் உச்சம் பெறுவதால் இந்த காலகட்டம் பல சாதகமான மாற்றங்களை கொண்டு வரக்கூடும்.செல்வத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
புதன் மிதுன ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிப்பதால், தங்கள் இலக்குகளை நோக்கி அதிக தன்னம்பிக்கையுடனும் வேகத்துடனும் செயல்படுவார்கள்.செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
கன்னி

கன்னி ராசியின் அதிபதியான புதனின் இந்த மாற்றம், இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். இந்த காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.புதிய ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.தொழிலில் முன்னேற்றமும் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் கூடி வரும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு பத்ர யோகம் பல நல்ல வாய்ப்புகளை கொண்டு வரக்கூடும். இந்த காலகட்டம் அவர்களின் வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.
நிதி நிலை மேம்படும் வாய்ப்பு உள்ளது. பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகளை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக பிறரிடம் சிக்கியிருந்த பணம் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |