வக்ர நிவர்த்தியடையும் புதன்... இந்த 3 ராசிகளின் தொழில் வாழ்க்கையில் இனி வெற்றி தான்
ஜோதிட ரீதியில் ஒரு கிரகமாகது அதன் இயக்கம்,திரை அல்லது நிலையை மாற்றும் போது பட்சத்தில் அதன் தாக்கமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில், புத்திக்கூர்மை, வணிகம் மற்றும் தொடர்பு மற்றும், அறிவாற்றலின் அதிபதியாக திகழும், நவகிரகங்களில் இளவரசனான புதன் பகவான் மார்ச் 25, 2026 அன்று தனது இயக்கத்தை மாற்றி நேரடி இயக்கத்தைத் தொடங்கப்போகிறார்.

புதனின் இந்த வக்ர நிவர்த்தியானது அனைத்து ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

புதன் வக்ர நிவர்த்தியால் மேஷ ராசியினருக்கும் தொழில் ரீதியில் எதிர்ப்பாராத அளவுக்கு நன்மையான பலன்கள் கூடிவரும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
புதன் ஆசியால் தொழில் மற்றும் குடும்பத்தில் இருந்துவந்த குழப்ப நிலைகள் நீங்கி சிந்தனையில் தெளிவு பிறக்கும்.
அதனால் தடைப்பட்ட அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் நிலை தானாகவே உருவாகும். பணியிடத்தில் திறமையை நிரூபிப்பதற்கு தகுந்த வாய்ப்பு அமையும்.
மிதுனம்

புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றமானது தனிப்பட்ட வாழ்விலும் சரி தொழில் வாழ்விலும் சரி அமோகமான பலன்களை கொடுக்கப்போகின்றது.
நீண்ட நாட்களாகவே தடைப்ட்டிருந்த விடயங்கயை நடத்துவதற்கான ஆற்றல் மற்றும் மனதெளிவு பிறக்கும். தொழில் முன்னனேற்றம் இருப்பதால் பொருளாதார நிலையும் திருத்தியளிப்பதாக இருக்கும்.
மார்ச் 25 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடல் கடந்த உறவுகளிடமிருந்து பெரியளவில் நிதியுதவி கிடைப்பதற்கான பிராப்தம் உண்டாகும்.
கன்னி

புதனால் ஆளப்படும் மற்றொரு ராசியான கன்னி ராசியினருக்கும் இந்த வக்ர நிவர்த்தியானது தொழில் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். பணவரவுக்கு இந்த காலகட்டதில் பஞ்சமே இருக்காது.
மார்ச் 25-க்குப் பின்னர் பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான யோகம் காணப்படுகின்றது. திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கும் அதிக லாபம் கிடைப்பதற்கான யோகம் உண்டு. குறிப்பாக முன்னைய முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் வரும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |