அந்த மூன்று நாட்கள் வலியால் அவதிப்படுகிறீர்களா? இனி அந்த பிரச்சினையே இல்லை
பெண்கள் பூப்படைந்த பின்பு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயல்பான ஒன்றே. அந்த மாதவிடாயுடன் சேர்ந்து அவர்களுக்கு உடல் சோர்வு, முகப்பருக்கள், தலைவலி, கால்வலி, அடிவயிறு வலி, வாந்தி போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.
இதனால் பெண்களுக்கு அவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை சரிவர செய்ய இயலாத ஒரு நிலை ஏற்படும். கர்ப்பப்பை எப்பொழுதும் நல்ல வலுவோடு இருக்க வேண்டும்.
அதற்கு நாட்டுக்கோழி முட்டை, மாதுளம்பழம், சிவப்பு கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் என்பவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சில பெண்களால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எழுந்து நடக்கவே இயலாத நிலை ஏற்படும். சிலருக்கு பூப்படைந்த காலத்துக்கு பிறகிலிருந்து திருமணம் வரை கூட இந்த வயிற்றுவலியை உணர முடியும்.
இந்த மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, வயிற்றுவலி, வாந்தி என்பவற்றை டிஸ்மெனோரியா என்று அழைப்பர். இந்த மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலிக்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.
- கழற்சி பருப்பு, ஓமம், இந்துப்பு, திரிகடுகம், பெருங்காயம் என்பவற்றை சமமாக எடுத்து வறுத்து பொடித்து 500 மி.லியாக எடுத்து, ஒரு கிராம் நல்லெண்ணெயில் கலந்து கொடுக்க வேண்டும்.
- குன்ம குடோரி மெழுகு 500 மில்லி எடுத்து காலை, இரவு கொடுக்க வேண்டும்.
- எலுமிச்சை சாறு, புதினா இலைச்சாறு என்பவற்றுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
- குமரி லேகியத்தை காலை, இரவு ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வர வேண்டும்.