50 வயதை தாண்டிய பெண்களுக்கு மாதவிடாய் நிற்கவில்லையா? அப்போ சிகிச்சை அவசியம்
பொதுவாக சாதாரண பெண்களுக்கு 50 வயதை தாண்டும் பொழுது மாதவிடாய் பிரச்சினை முற்றாக நின்று விடும்.
அதிலும் 100 ல் 2 அல்லது 3 பெண்களுக்கு வயதை தாண்டிய மாதவிடாய் சிக்கல் இருக்கும். இப்படியான நேரங்களில் பெண்கள் பயம் கொள்ள அவசியம் இல்லை.
மாறாக 50 வயதை கடந்தும் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகின்றது என்றால் உங்களுடைய ஹார்மோன்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று அர்த்தம்.
அதே வேளை, உரிய காலத்திற்குள் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அந்த வகையில், 50 வயதை கடந்த பெண்களுக்கு எப்படி மாதவிடாய் ஏற்படுகின்றது? என்பதனை காரணங்களுடன் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
50 வயதை தாண்டிய மாதவிடாய்
1. 50 வயதை தாண்டியும் உங்களுக்கு மாதவிடாய் வருகின்றது என்றால் உடனே கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பொப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.
2. பொதுவாக பெண்களுக்கு 50 வயதிற்கு பின்னரும் மாதவிடாய் வரும் என்ற விதி கிடையாது. ஆனாலும் கை வைத்தியம் செய்யாமல் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.
3. இது போன்ற நேரங்களில் ஹார்மோன்கள் மாற்றத்தினால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் ஆகிய பிரச்சினைகள் வருவது இயல்பு. இதற்காக தனியாக சிகிச்சை எடுப்பது அவசியம் இல்லை.
4. மாதவிடாய் காலங்களில் தலைவலி ஏற்பட்டால் உரிய மாத்திரைகள் எடுப்பது நல்லது. ஆனால் இது தொடரும் பட்சத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகளை செய்வது நல்லது.
5. சில பெண்களுக்கு தான் 50 வயதை தாண்டியும் மாதவிடாய் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இது அவர்களின் உடல்நிலையை பொறுத்த விடயமாக பார்க்கப்படுகின்றது.
6. மெனோபாஸ் காலப்பகுதியில் அம்மாவுக்கு சீக்கிரம் வந்து விட்டது என்றால் அது மகளுக்கும் ஏற்படும் என நினைப்பது தவறு. இது அவர் அவர் உடல்நிலையை பொறுத்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |