கொரானாவால் இறந்தவர்களிடம் நடந்த கொடுமை... புதைப்பதாக கூறி நடந்த அவலம்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலிலிருந்து நகைகளை திருடிய நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் நிலையில், மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
அவர்களின் உடல்களை ஹாஸ்ப்பிட்டலிலிருந்து கொரானா விதிப்படி அடக்கம் செய்ய சில நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனவத்தில் பணியாற்றும் கணேஷ் தேகேட் மற்றும் சத்ரபால் சோன்குஸ்ரே ஆகிய இருவரும் கொரானாவால் இறந்தவர்களின் உடலிலிருந்து தங்க நகைகள், செல்போன்கள் போன்றவற்றை திருடியுள்ளனர்.
உறவினர்கள் நோய் தொற்றுக்கு பயந்து அந்த பொருட்களை அப்படியே விட்டுச செல்வதை கவனித்த அவர்கள் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொற்றுநோயால் இறந்த தனது தந்தையின் மொபைல் போன் காணவில்லை என்று ஒரு பெண் பொலிசில் புகார் அளித்தபோது இந்த விஷயம் அம்பலமானது. அதன் பேரில் பொலிசாரின் விசாரணையின் போது இருவரும் தங்களது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளனர்.
பின்ப அவர்களிடமிருந்து .1.68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள், தங்க நகைகள் மற்றும் சில விலையுயர்ந்த பொருட்களை பொலிசார் மீட்டெடுத்தனர். அவர்கள் இதேபோல ஐந்து பேரிடம் பொருட்களை திருடியதால் பொலிசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
