மெனோபாஸ் நோய் வந்தால் காட்டக்கூடிய அறிகுறிகள் என்னனு தெரியுமா?
பெண்களுக்கு உண்டாகக்கூடிய மெனோபாஸ் நோய் வரும் போது அது எப்படியான அறிகுறிகளை காட்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மெனோபாஸ்
பெண்களின் சாதாரணமான ஒரு விஷயமாக மாதவிடாய் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் மெனோபாஸ் என்பதும் மிகவும் இயல்பான ஒன்றுதான்.
இது குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, சாதாரண மாதவிடாய் சுழற்சி படிப்படியாக நின்றுவிடும். 40 முதல் 45 வயது வரையுள்ள பெண்களின் உடல் மாறுகிறது.
இதனால் ஹார்மோன்களின் திடீர் மாற்றம் பல பெண்களின் உடல் மற்றும் மனம் சமநிலையை சீர்குலைக்கிறது. இந்த நேரத்தில் ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படுவதோடு, திடீரென உடல் எடையும் அதிகரிக்கும்.
12 மாதங்கள் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால், மாதவிடாய் நின்றுவிட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் பின்னர் கருப்பைகள் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்துகின்றன.
இதன் விளைவாக மாதவிடாய் நின்றுவிடும். இந்த மெயோபாஸ் வருவதற்கு முன்னர் தூக்கத்தின் போது உடல் முழுவதும் எரிவது போல தோன்றும்.
அசாதாரணமாக வியர்த்துக் கொட்டும். மாதவிடாய் வருவதற்கு முன்பே உடலில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
இதன் விளைவாக, மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள், எரிச்சல், கோபம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே இதை அறிந்து செயற்படுவது மிகவும் நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |