இந்த குணம் கொண்ட ஆண்கள் திருமண வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்களாம்..சாணக்கிய நீதி
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றின் படி, ஒருவர் தனது தொழில் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. மாறாக அவர்கள் திருமண வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு நாம் என்னென்ன விடயங்களை சரிச் செய்ய வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார் இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் கூறும் அறிவுரைகள்
1. நம்பிக்கை
காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி அதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு தம்பதிகள் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையை வாழ முடியாது. வாழ்க்கைத் துணையை அவரவர் வழியில் வாழ சுதந்திரம் கொடுப்பவர்கள் எப்போதும் வெற்றிகரமான வாழ்க்கை தான் வாழ்வார்கள். எனவே அனைத்து உறவுகளிலும் அன்பு, நம்பிக்கை அவசியம் இருக்க வேண்டும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருக்கும் ஆண்கள் மனைவி, காதலி தவிர்த்து வேறு பெண்களை கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது. அப்போது அவர்களின் உறவு நீடிக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
2. மரியாதை
ஆண்-பெண் உறவை வெற்றிகரமாக்குவதில் மரியாதை அவசியமாகும். பெண்களை மதிக்க தெரிந்த ஆண்கள் மட்டுமே துணையுடன் சந்தோஷமாக வாழ முடியும். எந்தவொரு பெண்ணும் ஆண்களிடம் இந்த குணம் இருந்தால் திருப்தியாவார்கள்.
மனைவி அல்லது காதலி இப்படி எந்த உறவாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்காத போது, அவர்களின் சொந்தப் பாதுகாப்பு குறித்த கேள்வி எழும். அத்துடன் அவர்களின் மனதில் இருக்கும் நம்பிக்கை உடைய ஆரம்பிக்கும்.
3. பாதுகாப்பு
பெண்கள் ஒருபோதும் பாதுகாப்பு தரும் ஆண்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கணவனாக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி அவர்கள் இருக்கும் போது பெண் பாதுகாப்பாக உணர்ந்தால் அந்த உறவு நீடிக்கும். அத்தகைய ஆண்கள் எப்போதும் பெண்களை கவனித்து பாதுகாத்துக் கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |