அரை மனசு காதலை எதிர்க்கும் சாணக்கியர்.. இனி இவர்களை நம்பாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றின் படி, ஒருவர் அரைமனம் கொண்டு ஒரு உறவில் இருந்தால், அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ வேண்டும் நினைப்பவர்கள் அரைமனம் கொண்ட காதலில் இருந்தால் என்னென்ன விடயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் கூறும் அறிவுரைகள்
1. மனம் சொல்வதை கேட்க வேண்டும்.
பொதுவாக ஒரு தவறு செய்யும் முன்னர் உங்கள் மனம் உங்களிடம் இது தவறு என உணர்த்தும். அப்படியான வேலைகளை செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என சாணக்கியர் கூறுகிறார். யார் வந்து பேசினாலும் அவர்கள் என்ன நோக்கத்திற்காக உங்களிடம் வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்வது நல்லது. இதனை கவனிப்பு என்ற விடயத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும். உங்களுடன் தேவைக்காக இருப்பவர்களை முடிந்தளவு தள்ளி வைப்பது நல்லது.
2. மதிப்பு உணர்ந்து கொள்ளுங்கள்
சாணக்கிய நீதியின்படி, ஒவ்வொரு மனிதருக்கும் இந்த உலகில் தனி மதிப்பு உள்ளது. அவர்கள் அதனை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை மரியாதையாக நடத்தும் பொழுது உங்களுக்கு உங்களின் மதிப்பு தெரியவரும். முடிந்தளவு தன்னை கட்டுபடுத்திக் கொள்வது சிறந்த பழக்கமாகும்.
3. ஆபத்தை உணர வேண்டும்.
அரை மனதுடன் காதலிப்பவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் வரலாம் என சாணக்கியர் கூறுகிறார். கொஞ்சம் நாட்கள் சென்றதும் மனகஷ்டங்கள் உண்டாகும், உறவுகளில் விரிசல்கள் வரும், பிரச்சினைகள் அடுத்தடுத்து வந்து வாழ்க்கையே வீணாகும். இது போன்ற பிரச்சினைகள் வரக் கூடாது என்றால் அரை மனதுடன் காதலிப்பதை நிறுத்தி விடுங்கள் என சாணக்கியர் எச்சரிக்கிறார்.
4. சரியான முடிவு எடுத்தல்.
என்ன செய்தாலும், அந்த விடயம் குறித்து தீர்க்கமான முடிவில் இருப்பது அவசியம் என சாணக்கியர் கூறுகிறார். அதுவும் குறிப்பாக ஒருவர் உறவில் இருக்கும் பொழுது அவர்கள் நிறைய இடங்களில் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். முடிவு எடுத்த பின்னர் அது பற்றிய வருத்தமும் இருக்கவே கூடாது. முடிந்தளவு புத்திசாலித்தனமான தீர்மானம் மற்றும் முடிவு உங்களின் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
5. கற்று கொள்ளல்
வருத்தப்படாமல் வாழ்க்கையில் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எதிர்காலம் பற்றிய கணிப்பில் முழ்கி இருப்பதை குறைத்து கொள்ள வேண்டும். பழைய நினைவுகளை விட்டுட்டு, புது வாழ்க்கையை நோக்கி தைரியத்துடன் பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |