ஆண்களுக்கு மூக்கு குத்தும் அதிசய கிராமம்: இதற்கு பின்பு இவ்வளவு காரணமா?
பொதுவாக பெண்களுக்கு மூக்கு குத்தி அழகு பார்க்கும் மக்களை நாம் அவதானித்து வரும் நிலையில், வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு மூக்கு குத்தி மூக்குவாழி போடும் வழக்கத்தினை கடைபிடித்து வருகின்றனர்.
இந்திய மாநிலமான தமிழகத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தில், இன்றைய நவீன காலத்தில் கூட ஆண் பிள்ளைகளுக்கு மூக்குவாழி அணியும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், குடும்பத்தில் ஒரு குழந்தை தவறியிருந்தால் அடுத்ததாக பிறக்கும் ஆண் குழந்தைக்கு இவ்வாறு அணிகின்றனர். மேலும் இவ்வாறு அணியும் குழந்தைக்கு எந்தவொரு ஆபத்தும் வராது என்று நம்புகின்றனர்.
இந்த மூக்குவாழியினை சிலர் சாதாரண செம்பு வளையத்திலும், அல்லது தங்கத்திலும் போடுவார்கள். இவ்வாறு தங்கத்தில் போடுபவர்கள் அதனை தங்களது முழுபணத்தையும் போட்டு வாங்குவதில்லை.
ஏழை வீடுகளில் தர்மம் கேட்டு அதில் கிடைக்கும் பணத்தினையே இதற்கு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மேற்கொண்டு பணம் தேவைப்படும் படசத்திலேயே தங்களது கையில் இருக்கும் பணத்தினை போட்டு வாங்குகின்றனர். குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாமல் பாதுகாக்க இப்படியுமா செய்வார்கள்? என்ற கேள்வி தற்போது அநேகருக்கும் எழுந்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைமுறையில் இருந்த இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது. ஆனால், இப்போதும் மன்னார்கோவில் கிராமத்தில் அந்தப் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

