கொள்ளையடிக்கும் அழகில் கோயிலில் பூஜை செய்வது ஆண்களா? மிரண்டு போன நெட்டிசன்கள்
நேர்த்தி கடனுக்காக ஆண்கள், பெண்கள் போல் அலங்காரம் செய்து பூஜை செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கலாச்சாரம்
பொதுவாக இந்தியர்களின் கலாச்சாரம் மற்றைய நாட்டவர்களை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும். இதனால் தான் மற்றைய இனத்தவர்கள் இந்திய கலாச்சாரத்தில் இருப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதன்படி, இந்தியாவில் கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் சமயவிளக்குத் திருவிழா என்று ஒரு திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்கள் போல் ஆடை அணிந்து தன்னை அலங்காரமும் செய்து கொண்டிருப்பார்கள்.
இந்த கலாச்சாரம் பாரம்பரியமாக நடைப்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் மேலதிகமாக தகவல்களை புரட்டும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
பெண்கள் போல் திரியும் ஆண்கள்
அதில், பிராத்தனைகள் அல்லது நேர்த்திகடன் என கூறப்படும் ஒரு வகையான பிராத்தனைக்காக தான் இந்த கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை அதிகாரியொருவர் புகைப்படங்களுடன் செய்தியை லீக் செய்துள்ளார்.
இதன்படி, இந்த திருவிழா மார்ச் மாதம் இரண்டாம் காலப்பகுதியில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் அணிகலன்கள் அணிந்து முதல் இடத்தில் இருக்கும் ஆண்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன புது திருவிழாவா இருக்கு.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.