குழந்தைகளின் ஞாபக சக்தியை தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா?
குழந்தைகளின் உடல் நிலை குறித்து பெற்றோர்கள் அதிகமாக கவலை கொள்வது உண்டு. அதிலும் படிக்கும் குழந்தைகளின் ஞாபக சக்தி என்பது மிக மிக முக்கியமே...
குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு பெற்றோர்கள் எந்தமாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டும் என்று அதிகமாக யோசிப்பது உண்டு. இங்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு வல்லாரை துவையல் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - ஒரு கப்,
பூண்டு - 2 பல்,
தேங்காய் துருவல் - கால் கப்
காய்ந்த மிளகாய் - 5,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வல்லாரை கீரையை தணியாக எடுத்துவிட்டு, இலைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரை மற்றும் பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் இவற்றினை சேர்த்து வதக்கி ஆறியதும் ஊப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் சாறில், சிறிது எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான வல்லாரை துவையல் தயார்.
குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போது தான் இதன் முழு பலனும் கிட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |