மறைந்த கணவர் மற்றும் புனித் ராஜ்குமாரை பற்றி உருக்கமான பதிவை வெளியிட்ட மேக்னா ராஜ் - மாரடைப்பு ஏற்படக்காரணம் இதுவா?
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கன்னட சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமா ரசிகர்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இதனையடுத்து, அவர் உடற்பயிற்ச்சி செய்த காரணத்தினாலே மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், உடலுக்கு உடற்பயிற்சி செய்வது அவசியமானது தான், ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.
அதிலும் நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற மிதமான உடற்பயிற்சிகள் எல்லா வயதினருக்கும் பாதுகாப்பானவை தான். உடற்பயிற்சியில், தசைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் ஆபத்தானவை.
இதனால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்புகள் உண்டு. மேலும் இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குடும்ப பின்னணியில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இதயதுடிப்பில் மாறுபாடு உள்ளவர்கள், இதய வீக்கம் உடையவர்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்த மிகு கொலஸ்ட்ரால், தைராய்டு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் புகைப்பிடிப்பவர்கள் பிறவியிலேயே இதய வாழ்வுகளிலும், இதய தமனி இதய தசைகளிலும், தங்கள் வயதுக்கு மீறி தீவிரமான உடற்பயிற்ச்சிகளை மேற்கொள்ளும் போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இவர்களுக்கு தீவிரமான உடற்பயிச்சியால், அழுத்தம் தரப்படும் போது அந்த சுவர்கள் திடீரென சுருங்கி விடும். இதனால் இதயச் சுவர்களுக்கு ரத்தம் செல்வது குறைந்துவிடுகிறது. அடுத்ததாக, ‘கேட்டகாலமின்’ எனும் ஹார்மோன்கள் இந்தப் பயிற்சிகளின்போது மிக அதிகமாகச் சுரக்கின்றன.
ரத்தத்தில் தனித்தனியாகச் சுற்ற வேண்டிய தட்டணுக்களை இவை திராட்சைக் கொத்துபோல் இணைத்துவிடுகின்றன. தண்ணீர்க் குழாய்க்குள் பாசி அடைத்துக்கொள்வதுபோல் இந்தக் கொத்துகள் இதயத் தமனிகளை அடைத்துவிடுகின்றன.
அடுத்து, முக்கியக் காரணம், தீவிரமான பயிற்சிகளின்போது, இதயச் சுவர்களுக்குத் தேவையான ரத்தம் கடுமையாக அதிகரிக்கும். அதை ஈடுகட்ட இதயத் துடிப்பும் அதிகரிக்கும். ஏற்கெனவே இதயத் துடிப்பில் மாறுபாடு உள்ளவர்களுக்கும் இதய மின்னோட்டப் பகுதியில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பவர்களுக்கும் மற்றவர்களைவிட இதயத் துடிப்பு அதிகரிப்பதால், உடலில் உருவாகியிருக்கும் ரத்த உறைவுக் கட்டிகள் இடம்பெயர்ந்து, இதயத் தமனிகளுக்கு வந்து அடைத்துக்கொள்கின்றன.
இப்படியான காரணிகளால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே சினிமா பிரபலங்களான சிரஞ்சீவி சர்ஜாவும், கன்னட நடிகர் புனித் ராஜ் குமாரும் இதுபோன்ற ஒரு பிரச்சினையும் சந்தித்து இருக்கலாம்.
சிரஞ்சீவி சர்ஜா 39 வயது வயதிலும், புனித் ராஜ்குமார் 46 வயதிலும் மாரடைப்பால் இறந்தது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிலையில், சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் மறைந்த கணவர் மற்றும் புனித் ராஜ்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து, “மறைந்த இரு நடிகர்களுக்கும் நிகழ் காலம் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் கற்றுக்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார்”.
