இரண்டாவது திருமணமா? கணவரை இழந்த மேக்னா ராஜின் திடீர் முடிவு - சச்சைக்கு முற்று
இரண்டாம் திருமணம் குறித்த வதந்திக்கு பதிலளிக்கும் விதமாக மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேக்னா சில வருடங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருந்த சிரஞ்சீவி சர்ஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி உயிரிழந்தார்.சிரஞ்சீவி மரணமடையும்போது மேக்னா ராஜ் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கணவர் உயிர் இழந்த சோகத்தில் இருந்த மேக்னாராஜ், அதிலிருந்து மீண்டு சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
ஒத்த புகைப்படம் மூலம் மேக்னா ராஜ் அளித்த பதில்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மேக்னாராஜிடம் அவரது இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ‘ஒரு கூட்டம் இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறார்கள். இன்னொரு கூட்டம் குழந்தைக்காக வாழச் சொல்கிறார்கள். நான் இன்னும் அந்த கேள்வியை எனக்குள் கேட்கவில்லை. என் குழந்தையின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருக்கிறேன் என்றும் கூறினார்.
தற்போது பலரின் கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக தன்னுடைய கணவர் மற்றும் மகனின் பெயர்களை டாட்டூ வரைந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.