விஜயகாந்தை பார்க்ககூட விடமாட்றாங்க! கண்ணீர் விட்ட ராதாரவி
நடிகர் விஜயகாந்தின் புகைப்படத்தினை அவதானித்த ராதாரவி அவரை பார்க்க அனுமதி கொடுக்க மாட்றாங்க என்று கூறி அழுதுள்ளார்.
சிறந்த நடிகர்
ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் தனது கம்பீர நடிப்பினால் பல படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இவர் தேமுதிக கட்சி ஒன்றினை துவங்கி அரசியலில் கால் பதித்தார்.
ஒரு கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராகவும் அமர்ந்த இவர் சில ஆண்டுகளாக உடல்நிலை முடியாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
சரியாக பேசவும், நடக்கவும் முடியாத இவருக்கு ஒரு நபரின் உதவியுடனே எங்கும் செல்வார்.

அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்
இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆம் குறித்த புகைப்படத்தில் மிகவும் வயதானவராகவும், உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் காணப்பட்டார்.

ராதாரவி குமுறல்
விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராதாரவி அவரது புகைப்படத்தினை அவதானித்து, நேரில் சந்திக்க விரும்பியுள்ளார். ஆனால் விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்கள் எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை. பார்ப்பதற்கு கூட அனுமதி கொடுக்கவில்லை என்று கண்கலங்கியுள்ளார்.
மேலும் சமீபத்தில் விஜயகாந்தின் கண்ணுபட போகுதய்யா படத்தினை அவதானித்த ராதாரவி விஜயகாந்தை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாகவும், அவர் செய்த தர்மங்கள் எதுவும் காப்பாற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.
விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் இருக்கும் ராதாரவி, வாடா போடா என்று பேசும் அளவிற்கு நெருங்கிய தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
