அந்த சாதியினரை சினிமாவை விட்டே துரத்த வேண்டும்! சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்... கொதித்தெழுந்த பார்வையாளர்கள்
தலித் சமூகம் குறித்து மீரா மிதுன் மிகவும் இழிவாக பேசிய காணொளி ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
ஒரு வீடியோ வெளியிட்டு தலித் சமூகத்தினர் குறித்து மிக இழிவாக அந்த வீடியோவில் பேசியுள்ளார் மீரா மிதுன்.
குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள், திரை பிரபலங்கள் தான் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் மிகவும் இழிவாக பேசியுள்ளார் மீரா.
அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சட்டரீதியான நடவடிக்கை தேவை..@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @thirumaofficial @WriterRavikumar @tnpoliceoffl pic.twitter.com/akusWxoX1G
— Ilayabarathi Ambedkar (@IlayabarathiAm1) August 6, 2021
ஏற்கனவே விஜய், சூர்யா குறித்தும் அவர்களது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார் மீரா மீதுன். இதற்கு பலரும் இணையத்தில் எதிர்வினை ஆற்ற, விஜய் சூர்யா ரசிகர்கள் தன்னை மன்னிக்குமாறு கூறி இருந்தார்.
இந்நிலையில் குறிப்பிட்ட சாதியினர் பற்றி மிக இழிவாக பேசியுள்ள மீரா மிதுனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.