41 வயதிலும் இளம்நடிகைகளுடன் போட்டி போடும் அழகு! மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள்
தமிழில் ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
மலையாளத்தில் சூத்ரதரன் படத்தில் அறிமுகமாகி மூன்று வருடத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்ற பெருமைக்குரியவர்.
ரன் பட வெற்றியை தொடர்ந்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
தொடர்ந்து சண்டைக்கோழி படம் மீரா ஜாஸ்மினுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது, துறுதுறுப்பெண்ணாக இவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது.
கடைசியாக விஞ்ஞானி படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின், நீண்ட இடைவெளிக்கு பின்னர் டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
தனிப்பட்ட காரணங்களால் சினிமாவுக்குள் நுழையாமல் இருந்த மீரா ஜாஸ்மீனின் 2ம் இன்னிங்ஸில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாகும்.