தொட்டதெல்லாம் பொன்னாகும்... ஆட்டம் ஆரம்பம்! மீன ராசி குரு பெயர்ச்சி பலன்
மே 26, 2026 வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு நற்பலன் என்னவென்பதை பதிவில் பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி - மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம குருவாக நான்காம் வீட்டில் இருந்து பலன் கொடுத்து கொண்டு இருந்த குரு பகவான் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற இருக்கிறார்.
குரு பகவான் மீன ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியாவார். பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வது என்பது நினைத்து பார்க்க முடியாத பலன்களை அள்ளி தர கூடிய ஒரு ஸ்தானமாகும்.

மேலும் குருவின் ஐந்தாம் பார்வை ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்திலும், ஏழாம் பார்வை பதினோராம் வீடான லாப ஸ்தானத்திலும், ஒன்பதாம் பார்வை ராசியில் உள்ள சனி பகவான் மீதும் விழுகிறது.
இதனால் மீன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. அதை விரிவாக பார்க்கலாம்.

பலன்கள்
ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறது. இது சுப பலன்களை தரக்கூடிய ஒரு அமைப்பாகும்.
இது போன்ற யோக காலம் மீண்டும் உருவாக 12 ஆண்டுகள் எடுக்கும். எனவே மீன ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் கோபுரத்திற்கு செல்வீர்கள்.
தீராத பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையே அடியோடு மாறும்.
இதுவரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும்.
இதுவரை நிலவி வந்த தடைகள், தாமதங்கள் நீங்கி முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு, பரிசுகள் குவியும்.
திருமணம், வீடு வாங்குவது, குழந்தைப் பேறு, நிரந்தர தொழில் என அனைத்து பலன்களையும் அனுபவிப்பீர்கள்.
குருவின் ஐந்தாம் பார்வை ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் விழுகிறது.
இதன் காரணமாக பல காலமாக தீராமல் இருந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
உறவினர்கள் மத்தியில் உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும்.
தவறான புரிதலால் பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள்.
உங்களைப் பற்றிய பிறரின் தவறான எண்ணங்கள் மறைந்து நல்ல சிந்தனை உண்டாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |