ப்ளீஸ்... என் அம்மாவை தப்பா பேசாதீங்க.... - மகள் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய மீனா!
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் பிரச்சினையால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மகள் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய மீனா
சமீபத்தில் மீனா சினிமாவில் வந்து 40 ஆண்டை நிறைவு செய்தார். இதனையொட்டி நடிகை மீனாவிற்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகை மீனாவிற்கு அவரது மகள் நைனிகா மேடை கேமராவில் தோன்றி சர்ப்ரைஸ் கொடுத்தார்.
அப்போது, நடிகை மீனா மகள் நைனிகா பேசுகையில்,
40 வருடமாக என் அம்மா தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். எங்க அம்மா ஒரு நடிகை. படப்பிடிப்பில் அவங்க நிறைய வேலை பார்ப்பாங்க. ஆனால், வீட்டில் வந்தால் அவங்க எனக்கு அம்மா மட்டும்தான். எங்க அம்மா நல்லா படித்து, சினிமாவில் பிரபல நடிகையாக உயர்ந்து வந்தாங்க. எங்க அம்மா எதிரில் யாராவது தப்பா பேசினால், யாருடா நீ... எப்படி இப்படியெல்லாம் என் எதிரில் பேசுவ என்று அப்படியெல்லாம் எங்க அம்மா கோபம் பட மாட்டாங்க. இதெல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது.

அம்மா நான் உங்களுக்காக எதாவது பெரிசா செய்வேன். ஒரு பெரிய வீடு உங்களுக்காக வாங்கி கொடுப்பேன். எங்க அப்பா இறந்து போன பிறகு எங்க அம்மா ரொம்ப மனஅழுத்ததில் இருந்தாங்க. எங்க அம்மா நிறைய முறை அழுதிருக்காங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இதிலிருந்து அம்மாவை வெளியே கொண்டு வர நான் ஒரு கிப்ட் கூட வாங்கி கொடுத்தேன். என்னை குழந்தையிலிருந்து நீங்க தான் பார்த்துக்கொண்டிருந்தீங்க. ஆனா இப்போ.. உங்களை நான் நல்லா பாத்துக்க போறேன். உங்களுக்கு உதவி செய்வேன்.

நிறைய பிரபல சேனல்கள் என் அம்மா பற்றி நிறைய பொய்யான தகவலை எழுதுறாங்க. எங்க அம்மா 2வது குழந்தைக்கு தாயா இருக்காங்கன்னு செய்தி வெளியானது. அதை பார்த்தவுடன் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. என் அம்மா பற்றி நிறைய தப்பு தப்பா செய்தி வெளியானபோது எனக்கு அதெல்லாம் பிடிக்காமல் போனது. இதையெல்லாம் கொஞ்சம் நிறுத்திவிடுங்கள்.
அம்மா ஒரு நடிகையாக இருக்கலாம். ஆனா... அவங்க ஒரு மனுஷி. அவங்களுக்கும் உணர்வுகள் இருக்கும். இதுமாதிரியெல்லாம் செய்யாதீங்க என்று பேசினார்.
மகள் பேசுவதைப் பார்த்த மீனா ஒரு கணம் அப்படியே கண் கலங்கினார். மீனா மட்டும் அல்ல, அந்த நிகழ்ச்சி வந்த விருந்தினர்களும் கண்கலங்கி விட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.