உங்க வேலையை பார்த்துட்டு போங்க... கலா மாஸ்டரை திட்டிய நடிகை மீனா
நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்து கூறிய விடயத்தை கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் கடந்த வருடம் ஜுன் மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
இதனால் அதீத மனஉளைச்சலுக்கு ஆளான மீனா, துக்கமான நேரத்திலும் கணவருக்காக இறுதிச்சடங்குகளை அவரே செய்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்தார். இவருக்கு இவரது தோழியான கலா மாஸ்டர் உறுதுணையாக இருந்தார்.
மீனா திருமணம் குறித்து கலா மாஸ்டர்
மீனாவின் 25 வருட தோழியான கலா மாஸ்டர் பேசுகையில், மீனாவின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத போது மீனாவுடனே தான் இருந்தேன்... சினிமாவிற்கு ஹீரோயினராக இருக்கும் மீனா நிஜத்தில் மென்மையான மனம் கொண்டவர் ஆவார்.
மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து மீனாவிடம், உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும், இது சின்ன வயது தான் என்று கூறியதற்கு மீனாவிடம் திட்டு வாங்கியுள்ளாராம்.
உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க அக்கா... அதெல்லாம் வேண்டாம்... எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறியதாகவும், தான் வாயை மூடிவிட்டு சென்றுவிடுவதாக கலா மாஸ்டர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |