ஹாலிவுட் ஹீரோ போல இருக்கும் கணவர் - வித்யாசாகர் பிரிவால் கலங்கி நிற்கும் நடிகை மீனா!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் புகைப்படத்தினை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நேற்று மீனாவின் 13ம் திருமண நாள்.
இந்த நேரத்தில் கணவரை இழந்த துயரத்தில் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள், ஆனால் மிக சீக்கிரமே எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டீர்கள்.

ஆனால் எப்போதும் என் இதயத்தில் இருப்பீங்க." "உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பும் எல்லோருக்கும் நானும் என் குடும்பமும் நன்றி சொல்கிறோம்.
அது எங்களுக்கு இப்போது அதிகம் தேவை. "இப்படி ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பம் இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என மீனா குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.