அன்றிலிருந்து இன்று வரைக்கும்... ரஜினியுடன் மீனா
நடிகை குழந்தை நட்சத்திரமாக நடித்து கதாநாயகியாக வளர்ந்த மீனா ஆரம்பத்தில் இருந்து ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனா. இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர்.
இவர் 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.
மீனாவில் கணவர் கடந்த வருடம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். கணவன் இறப்பிற்கு பிறகு வெளியில் வந்து சில சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.
ரஜினியுடன் மீனா
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார் மீனா.
இவர் 1982ஆம் ஆண்டு எங்கேயோ கேட்ட குரல் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு வளர்ந்து வந்து ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து முத்து, குசேலன், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்து ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |