எதுக்கு என்னை கூப்பிட்டீர்கள்? செய்தியாளர்களிடம் கோபத்தில் பேசிய மீனா
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழாவில் கலந்து கொண்டுள்ள மீனா கோபத்தில் பேசிய காணொளி வைரலாகி வருகின்றது.
சர்வதேச விருதுகள்
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு தாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த விழா செப்டம்பர் 29ம் தேதி நிறைவடைந்தது.
இந்த விருது விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட நிலையில், இந்த விழாவில் நடிகை மீனாவும் அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்த போது, ஒருவர் மட்டும் இந்தியில் பேசுமாறு கூறியுள்ளார். இதைக்கேட்டு கொந்தளித்த நடிகை மீனா, இது இந்தி விழாவா? இந்தியில் தான் பேச வேண்டுமா? அதுக்கு எதற்கு என்னை கூப்பிட்டீங்க? என்று கேட்டுள்ளார்.
மேலும் தென்னிந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்" என மீனா பேசியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
She is very candid and very humble. She doesn't wear a celebrity hat. "Hindi ya, eppadi ennai kuputingge?" ??
— Meena ᴹᴱᴱᴺᵁ (@Meena_team) September 29, 2024
A very proud South Indian queen for a reason ? #Meena #IIFA #IIFAUtsavam2024 #IIFAUtsavam #IIFA2024 pic.twitter.com/rrWKvzwbcp
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |