பெண்களின் அனைத்துவிதமான பிரச்சனைகளும் தீர வேண்டுமா? இந்த ஒரு கிழங்கு போதும்
தண்ணீர் விட்டான் கிழங்கு பெண்களுக்கு வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக காணப்படுவதால் இதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர் விட்டான் கிழங்கு
இந்த கிழங்கு 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது இதுமட்டுமல்லாமல் இது ஒரு மூலிகை வகையை சேர்ந்தது. இது பெண்களுக்கென்றே படைக்கப்பட்ட கிழங்கு என்று சொல்லலாம்.
சில பருவமடைந்த பெண்கள், மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாக தோற்றமளிப்பார்கள். அவர்களுக்கு இந்த கிழங்கு மிகவும் நன்மை தரக்கூடியது.
இந்த கிழங்கில் இருந்து அனேகமான மருந்துகள் செய்யப்படுகின்ற. இது நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கர்ப்ப காலத்தில் தொடர்ந்து இந்த கிழங்கை பெண்கள் சாப்பிடும்போது, பிரசவம் எளிதாகும் . முக்கியமாக, பனிக்குடத்தில் உள்ள தண்ணீர் குறையாமல் சுகப்பிரசவம் ஏற்பட இந்த கிழங்கு துணைபுரிவதாக ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க இந்த கிழங்க தினசரி சாப்பிட வேண்டும். மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இந்த கிழங்கு உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |