தினமும் 2 -3 மிளகு போதும்! டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் சளி, இருமல் பிரச்சினைகளை சரிசெய்து கொள்வதற்கு சமையலறையிலுள்ள அஞ்சறைப்பெட்டியே போதுமானதாக இருக்கும்.
அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், மசாலாக்கள், இஞ்சி, மிளகு உள்ளிட்ட பொருட்கள் நமக்கு ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்கின்றது.
அந்த வகையில் அஞ்சறைப்பெட்டியில் முக்கிய பொருளாக இருக்கும் மிளகு, சளி பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் கொடுப்பதுடன் ஏகப்பட்ட நோய்களுக்கும் மருந்தாகிறது.
ஏனெனின் மிளகில் தயாமின், ரிபோபிலவின், ரியாசின் உள்ளிட்ட வைட்டமின்கள் இருக்கின்றன.
இதன்படி, மிளகை உணவில் சேர்த்து கொள்வதாலும் மிளகு டீ போட்டு குடிப்பதாலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
மிளகு டீ
தேவையான பொருட்கள்
- கொதிநீர் - 1 கப்
- கருப்பு மிளகு - 1/2 ஸ்பூன்
- தேன் - சுவைக்கேற்ப
செய்முறை:
ஒரு கப் கொதிக்கும் நீரில் 1/2 ஸ்பூன் கருப்பு மிளகு தூள் சேர்க்கவும்.
மூடிய நிலையில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15 நிமிடம் கழித்து ஒரு கப்பில் அதை வடிகட்டி, அதில் தேன் கலந்து குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டு வந்தால் சிறந்த பயனளிக்கக்கூடும்.
கருப்பு மிளகு
1. கருப்பு மிளகு உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றி உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
2. உடலில் இருக்கும் கால்சியம் சோடியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சலுக்கு உதவியாக இருக்கின்றது.
3. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை இல்லாமல் ஆக்குகின்றது.
4. குடலில் சிக்கியுள்ள அழுக்கு, நச்சுகள் மற்றும் கழிவுகளை சுத்தப்படுத்துவதில் கருப்பு மிளகு பெரும் பங்களிப்பு செய்கின்றது.
5. ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளதால் தொண்டை வலியிலிருந்து நிவாரண அடைய முடியும்.
6. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
7. மஞ்சள் மற்றும் சிவப்பரிசியின் உறிஞ்சுதலை அதிகரிக்க அவற்றுடன் கருப்பு மிளகு சேர்த்து வருவதனால் கொலஸ்ட்ரோல் குறையக்கூடும்.
8. கருப்பு மிளகில் அழற்சி எதிர்ப்பு கூறுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மூட்டு வலிக்கு தீர்வளிக்கிறது.
9. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
10. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |