வெயில் காலங்களில் மாம்பழம் சாப்பிடுவீங்களா? தோலை தூக்கி எறியாதீங்க- நன்மைகள் ஏராளம்
மாம்பழம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாகும். ஆகவே மாம்பழத்தை சாப்பிட்டு அதன் தோலை எறிந்து விடுவார்கள்.
அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் தூக்கி எறியமாட்டீர்கள்.
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
மனிதர்களின் உடலுக்கு முக்கியமாக தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் அனைத்தும் இந்த ஒரு பழத்திலேயே காணப்படுகின்றது.
முகத்தில் உள்ள சுருக்கத்தை நீக்க
முகத்தில் காணப்படுகின்ற சுருக்கங்களை போக்குவதற்காக இதை பயன்படுத்துவார்கள்.
முதலில் உலர வைத்த மாம்பழத்தோலை அரைத்து, அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவாக மாறும் மற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
இயற்கை உரம்
மாம்பழத்தோழில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் காணப்படுகின்றன. ஆகவே தாவரங்களுடன் சேர்த்தால் அது கரிம உரமாக பயன்படுத்தப்படும்.
முகத்தில் உள்ள பருக்களை நீங்க
மாம்பழத்தோலை அரைத்து பேஸ்ட் செய்து பின் அதை பருக்கள் மீது தடவினால் சில நாட்களில் பரு மறைந்துவிடும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாம்பழத் தோல்களில் அதிகமாகவே காணப்படுகின்றன.
இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பாதிப்பைக் குறைக்க உதவுகின்றன.
இவை கண்கள், இதயம் மற்றும் தோலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் இவற்றை மாம்பழத் தோல்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் பல நன்மைகளைக் கொண்ட இந்த மாம்பழத்தோழில் புற்று நோயை தடுக்கவும் உடல் எடையயை குறைக்கவும் சத்துகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.