வாய் துர்நாற்றத்தை வேருடன் இல்லாமலாக்கும் ரோஜா பூ கஷாயம்
நாம் அலங்கார பொருளாகவும், வாசனை மலராகவும் பயன்படுத்தும் ரோஜாக்களில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
இதன்படி, ரோஜாக்களில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
இதனால் சரும பிரச்சினைகள் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றது.
அந்த வகையில் ரோஜா பூக்களில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ரோஜா பூக்களில் மருத்துவ குணங்கள் உள்ளதா?
Image - 1- 800-Flowers.com
1. இதய நோயுள்ளவர்கள் மலச்சிக்கலில் அவஸ்த்தை படும் போது ரோஜா பூக்களுடன் கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து விட்டு சாப்பிட வேண்டும்.
2. வெற்றிலை போடுபவர்களுக்கு அவர்களின் வாயில் ஒரு வித துர்நாற்றம் எழும். இதனை தடுக்க வேண்டும் என்றால் வெற்றிலையுடன் ரோஜா இதழ்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் துர்நாற்றமே வராது.
3. காலை, மாலை என இரு வேளைகளும் ரோஜா இதழ்களை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் சீதபேதி எனப்படும் நோய் இரண்டு நாட்களில் குணமாகி விடும்.
4. ரோஜாப் பூ கஷாயம் செய்து குடித்து வந்தால் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். அத்துடன் காயங்கள் இருந்தால் ரோஜா பூக்கள் கலந்த நீரினால் கழுவலாம்.
5. ரோஜா இதழ்களை குளிர்மையான இடத்தில் வைத்து உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |