இதுதான் உலகிலேயே மிக ஆரோக்கியமான காய்கறியாம்.. அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?
பொதுவாக காய்கறிகள் தான் நமது உடலில் வருகின்ற பாதி நோயிற்கு மருந்தாக பயன்படுகின்றது.
அந்த வகையில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வின் படி, “வாட்டர் கிரெஸ்” எனப்படும் தாவரம் சேதமடைந்த செல்களை மீண்டும் சரிச் செய்கின்றதாம்.
அத்துடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை அழித்து புற்றுநோயிற்கு எதிராக போராடுகின்றது.
தற்போது அநேகமானவர்கள் “வைட்டமின் சி”க்காக ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை தான் வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆனால் இவைகளை விட வாட்டர் கிரெஸில் அதிகமான வைட்டமின் சி இருக்கின்றது.
அந்த வகையில் வாட்டர் கிரெஸ் தாவரத்தில் என்ன என்ன மருத்துவ நன்மைகள் இருக்கின்றது? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வாட்டர் கிரெஸ் தாவரத்தின் நன்மைகள்
1. உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியத்திற்கு இந்த தாவரம் சரியானதாக பார்க்கப்படுகின்றது.
2. போலேட் நிறைந்தது மற்றும் இதிலுள்ள வைட்டமின்-பி மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.
3. வாட்டர் கிரெஸ் உடல் ஆரோக்கியத்தை போல் சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் தான் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இந்த காய்கறியை "உலகின் ஆரோக்கியமான காய்கறி" என அறிவித்துள்ளது.
4. கடுமையான உடற்பயிற்சியில் தசைகளில் ஏற்படும் பாதிப்பு வாட்டர் கிரெஸ் தாவரத்தினால் எளிதில் குணமாகும்.
5. உயர்நிலை அமினோ அமிலம் காணப்படுவதால், புரதங்களை ஜீரணிக்கவும் உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |