வெறும் பிரசாதம் மட்டுமல்ல! பழனி பஞ்சாமிர்ததின் மருத்துவகுணங்கள் பற்றி தெரியுமா?
ஏழாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து மதத்துக்கு உலகம் முழுவதும் கோவில்கள் காணப்படுகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்து மதத்தில் பெரும்பாலான இந்து கடவுள்கள் ஏதோ ஒரு விருப்பமான உணவுடன் தொடர்புடையவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.
பொதுவாக, சுவாமிக்கு படைக்கும் நைவேத்திய உணவு வகைகள் அந்தந்த கோயிலுக்கு உரிய வழக்கமான ஒழுங்குமுறைப்படி தயார் செய்யப்பட்டு பின்பு தெய்வங்களுக்குப் படைக்கப்படுட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றது.

திருப்பதி கோவில் லட்டு, திருப்புல்லாணி பாயசம், மதுரை அழகர் கோவில் சம்பா தோசை போன்றவை பிரசித்தி பெற்ற பிரசாதங்களாக அறியப்படுகின்றது.
அந்தவகையில் உலக புகழ் பெற்ற பழனி பஞ்சாமிர்தம் பக்தர்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் தொடர்பிலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பழனி பஞ்சாமிர்தத்தின் சிறப்பு
விளைச்சல் தரக்கூடிய நிலத்தை குறிப்பிடும் சொல்லான ‘பழனம்’ என்ற பழைய சொல்லிலிருந்து ‘பழம்’ என்ற சொல் வந்தது. ஆகவே, நன்கு விளைச்சல் தரக்கூடிய பகுதியில் அமைந்துள்ள இடமாக பழனி இருக்கிறது.

முருகப்பெருமானை அவருடைய தாய், தந்தையர்களான சிவனும், பார்வதியும் 'ஞானப்பழம் நீ' என்று அழைத்ததால்' பழம் நீ என வழங்கப்பெற்று பிறகு, 'பழனி' என மருவியதாகவும் வரலாறு குறிப்பிடுகின்றது.
அதேபோல, பழனியில் தரப்படும் பஞ்சாமிருதத்திற்கும் நிறைய மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது. பச்சை மலை வாழைப்பழம், தேன், கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பேரிச்சம்பழம் ஆகிய 5 வகையான முக்கிய பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுவதால், இதற்கு பஞ்சாமிர்தம் என்று பெயர் வந்ததுள்ளது.
இந்த 5 மூலப்பொருட்களுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இந்த பொருட்களுடன், கூடுதல் சுவைக்காக நெய், ஏலக்காய்யும் நேர்க்கப்படுகின்றது. அந்த பொருட்களின் ஐக்கியமானது சிறப்பான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
மேலும் கொட்டையில்லாத பேரிச்சம்பழம், விருப்பாச்சி வாழைப்பழங்கள் சிறிய அளவிலும் சேர்க்கப்படுகின்றன. பழனி மலையில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரான விருப்பாச்சி என்ற பெயரில் அழைக்கப்படும் விருப்பாச்சி வாழைப்பழத்தில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருந்து பஞ்சாமிர்தத்திற்கு அதீத சுவையை கொடுக்கின்றன.
எந்தவித செயற்கை பொருட்களும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழனி பஞ்சாமிர்தத்தை தயாரிக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்கப்படுவதில்லை என்பதுதான் அதன் தனித்துவமாக சிறப்பு.
இவ்வாறு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பல மாதங்கள் கூட கெட்டுப்போகாமல் இருப்பதுடன் இதனை உட்கொண்டால் பக்தர்களின் நோய் தீர்க்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்
ஆயுர்வேதத்தின்படி, இந்த கலவை உடலின் ஏழு திசுக்களை (சப்த தாது) வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. பழனி பஞ்சாமிர்தமானது இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவத துணைப்புரிகின்றது.
அதில் கலக்கப்படும் தேன் மற்றும் நாட்டு சர்க்கரை போன்ற பொருட்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன, அதே நேரத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் விருபாச்சி வாழைப்பழம் என்டி - பயாடிக்குகளின் நல்ல மூலமாகும்.இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.

இதில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் (வாழைப்பழம் மற்றும் பேரீச்சம்பழங்களிலிருந்து) நிறைந்துள்ளது, இது விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
அதில் கலக்கப்படும் நெய் மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது, அதே நேரத்தில் ஒட்டுமொத்த கலவை உடல் வலிமை மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றது.

அதனை தினசரி சிறிதளவு சாப்பிடுட்டு வந்தால், ஒரு இயற்கையான தோல் சுத்தப்படுத்தியாக செயல்படுவதாகவும், தோல் மற்றும் முடி இரண்டின் தரத்தையும் நிறத்தையும் மேம்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தினமும் 2 ஸ்பூன் பஞ்சாமிர்தம் சாப்பிடும்போது, இதிலுள்ள ப்ரக்டோஸ், அன்றைய தினத்துக்கு தேவையான செரோடோன் என்ற ஹார்மோனை சுரக்க செய்வதாக மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.இந்த செரடோனின் என்பது மகிழ்ச்சி உணர்வை தூண்டக்கூடிய ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |