கண் பார்வையில் பிரச்சினையா? அரை கீரை செய்யும் அற்புதம்
கீரை வகைகளில் குட்டையானதும் தடித்த தண்டுகளை உடையதுமான அரை கீரை பல வகை நன்மைகளுக்கு உடலுக்கு தரக்கூடியது. இதன் பயன்கள் பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
அரைக்கீரையின் பயன்கள்
வாரம் ஒருமுறை அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நரம்பு தளர்ச்சி குணமாகுமாம்.
இந்த கீரையில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மெலிந்த உடல் பலன் பெறுவதுடன் எடையும் அதிகரிக்கும்.
தொடர்ந்து அரைக்கீரையை எடுத்துக்கொண்டால் நாள்பட்ட வயிறு சம்பந்தமான பிரச்சினை முற்றிலும் சரியாகும்.
குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரைக்கீரை கொடுப்பது சிறந்த உணவு மட்டுமின்றி பால் சுரக்கமும் உதவி செய்கின்றது.
கண் பிரச்சினையை முழுவதும் சரியாவதுடன், சிறுநீரக கற்களையும் கரைந்து நன்மை பயக்கின்றது.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மஞ்சள் சேர்க்காமல் கீரையை உணவில் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லதாகும்.