வெறும் 10 நிமிடத்தில் நிவாரணம்! இந்த மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்
இன்றைய சூழலில் சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தால் கூட மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகிவிட்டது.
ஆனால் அக்காலத்தில் நம் பாட்டி, தாத்தாக்கள் எல்லாம் வீட்டில் நம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்களையே மருந்தாக்கினார்கள்.
அவைகள் என்னவென்று இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
* இருமலால் அவதிப்பட்டால் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் நான்கு வேளை வீதம், ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சரியாகும், வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் சளியும் வெளியேறும்.
* வயிற்று வலி ஏற்பட்டால் ஒருபிடி கறிவேப்பிலையை, புளித்த மோரிலோ, சுடுநீரிலோ அரைத்து பருகுங்கள்.
* சிறிதளவு கடுகு எண்ணெய்யை சூடாக்கி தொப்புளை சுற்றி தேய்த்தாலும் வலி நீங்கும்.

* வாயு தொந்தரவு ஏற்பட்டால் பாலில் பூண்டு போட்டு காய்ச்சி இரவில் பருகுங்கள். ஒரு வாரம் தொடர்ச்சியாக இதை பருகினால் வாயு தொந்தரவு அகலும்.
* செரிமான பிரச்சனை இருந்தால் இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில் எடுத்து சிறிதளவு இந்துப்பூவும் கலந்து தினமும் நான்கு வேளை பருகலாம்.
* புளித்த ஏப்பம் சரியாக இஞ்சி சாறில் மிளகு, சீரகம் கலந்து மென்று திங்கலாம், இஞ்சி சாறில் சிறிதளவு உப்பு கலந்து ருசித்தால் வயிற்றுவலி, வாந்தி கட்டுப்படும்.
* மூன்று பங்கு கறிவேப்பிலை, ஒரு பங்கு மிளகு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு உருட்டி புளித்த மோரில் கலக்கி குடித்தால் வாய்ப்புண் சரியாகும்.