இறைச்சி உணவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? வெளியான ஆய்வு முடிவு
இறைச்சி உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதனை அளவோடு சாப்பிடுவது தான் ஆரோக்கியம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இறைச்சி உணவுகள்
இறைச்சி உணவுகள் உடம்பிற்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் அவ்வப்போது விவாதம் நடைபெற்று வந்தாலும், சமீபத்தில் ஆய்வுகள் ஒரு விடயத்தினை விளக்கியுள்ளது.
சிவப்பு இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் பல தாதுக்கள் செழுமையான அளவில் உள்ளன.
இறைச்சியில் காணப்படும் ஹீம் அயன் (Heme Iron) எனப்படும் இரும்புச்சத்து, நம் உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லவும், ஹார்மோன் உற்பத்திக்கும் மிக அவசியமாக இருக்கின்றது.
ரத்த சோகை பெரும்பாலும் இந்த இரும்புச்சத்து குறைபாட்டால் தான் வருகின்றது. குறிப்பாக பெண்களை ரத்த சோகை அதிகமாக பாதிக்கின்றது.
ரத்தசோகையைத் தடுக்க, ஈரல் இறைச்சி மிகச் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் சிவப்பு இறைச்சியில் உள்ள வைட்டமின் பி12, ரத்தம் மற்றும் டி.என்.ஏ. உருவாக முக்கியச் சத்தாக இருப்பதுடன், உடலில் பல்வேறு ஹார்மோன்கள், நொதிகள் உருவாக்கத்திலும் பயன்படுகின்றது.
அளவாக சாப்பிடவும்
அதாவது சில விலங்குகளின் சிவப்பு இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது நமது உடலில் "கெட்ட கொழுப்பை" அதிகரிக்கும்.
ஆகவே இந்த கெட்ட கொழுப்பு பிரச்சனையைத் தடுப்பதற்கு சிவப்பு இறைச்சியை சிறிய அளவில், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே இதய நோய் அல்லது அதிக கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் இறைச்சி சாப்பிட விரும்பினால், மிக குறைவாக அளவு எடுத்துக்கொள்ள மறுத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தற்போது சிவப்பு இறைச்சி நல்லது தான் என்றாலும் இதனை அளவாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |