நெற்றியில் பட்டை போடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்க
பொதுவாகவே நெற்றியில் பட்டை போடுவது என்பது இந்து சமயத்தின் பிரகாரம் ஒருவரின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சடங்காகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.
குறிப்பாக சிவனை வழிபடுபவர்கள் இறைவனை வணங்கிய பின்னர் ஆலயத்தில் தரப்படும் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்டு பட்டையாக தீட்டிக்கொள்வார்கள்.
இவ்வாறு நெற்றியில் பட்டை அணிவது ஆன்மிக ரீதியாகவும், உடல் ஆரோக்கிய ரீதியாகவும் பல்வேறு நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது.
அந்தவகையில் நெற்றியில் பட்டை போடுவதால், கிடைக்கு ஆன்மீக மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்மீக பலன்கள்
கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓரு முக்கிய காரணம் காணப்படுகின்றது. நாம் பட்டை அணிவதற்கு பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் அடையாளம் என குறிப்பிடப்படுகின்றது.
இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. இவ்வாறு அணிவதால் சிவபெருமானின் அருள் பரிபூரணமான கிடைக்கும் என வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
பட்டை அணிவதன் மூலம், ஒருவரின் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும்.
விபூதி என்பது இவ்வுலகில் எல்லாம் ஒரு நாள் பஸ்பமாகும் என்பதை வழிவறுத்துகின்றது.அதாவது அனைத்து அழியும் இவ்வுலகில் அனைத்தம் மாயை என்பதை குறிக்கின்றது.
பட்டை அணிவது இறைவனின் நினைவை மனதில் கொண்டுவர உதவுகிறது, மேலும் இறைவனுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.
மேலும் பட்டை அணிவது ஒருவரை புனிதமானவராக ஆக்குகிறது என்றும் ஆன்மீக பாதையில் செல்வதற்கு துணைபுரிவதாகவும் நம்பப்படுகின்றது.
ஆரோக்கிய நன்மைகள்
விபூதி அணிவதன் மூலம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது வெப்பமான காலநிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தலையில் உள்ள நீரை உறிஞ்சும் தன்மை விபூதிக்கு காணப்படுவதால், குளித்தவுடன் பட்டை அணிவதால், ஜரதோஷம் மற்றும் தலைவலி, போன்ற பிரச்சிகைளில் இருந்து விடுபட முடிகின்றது.
விபூதி அல்லது பட்டை அணிவது சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. இதில் கிருமிகளை அழிக்கும் பண்பு அதிகளில் காணப்படுவதால், சர்ம பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது.
விபூதி அணிவது மன அழுத்தத்தைக் குறைத்து அமைதிப்படுத்த உதவுகிறது என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. மேலும் பட்டை அணிவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |