கனவில் சிவலிங்கத்துடன் பாம்பு வந்தால் என்ன பலன்?
நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது உங்கள் கனவில் சிவலிங்கத்துடன் பாம்பு வந்தால் என்ன பலன் என்பதை பதிவில் பார்க்கலாம்.

கனவில் சிவலிங்கத்துடன் பாம்பு
நமக்கு கனவு வருவது சாதாரண விடயம் அல்ல. கனவு உலகம் மிகவும் விசித்திரமானது. பல கனவுகள் நாம் கண்டிருப்போம். அதற்கு ஜோதிடத்தில் பல காரணங்கள் உள்ளது.
அந்த வகையில் சிவலிங்கத்துடன் பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.
சனாதன தர்மத்தில், சிவனுக்கும் பாம்பிற்கும் உள்ள தொடர்பு ஆழமானது. அதனால், இந்தக் கனவு பலருக்கும் ஒரு விசேஷமான அறிகுறியாகத் தோன்றும்.

என்ன பலன்?
சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு, சக்தி, அச்சமின்மை மற்றும் புலன்கள் மீதான கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. சிவலிங்கம் படைப்பு, ஆற்றல் மற்றும் பிரக்ஞையின் சின்னம்.
இந்த இரண்டும் கனவில் ஒன்றாகத் தோன்றினால் அது ஒரு நபரின் ஆன்மீக வாழ்க்கை அல்லது மனநிலையின் அறிகுறி என சொப்பன சாஸ்திரம் கூறுகின்றது.

கனவு சாஸ்திரத்தின்படி, சிவலிங்கத்தின் அருகே பாம்பு அமைதியாக இருப்பது ஒரு நல்ல அறிகுறி.
இது ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள், தடைப்பட்ட காரியங்களில் முன்னேற்றம் அல்லது ஆன்மீக வளர்ச்சி ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது.

உங்கள் கனவில் சிவலிங்கமும் பாம்பும் இருந்தால் நீங்கள் எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது, சரியான நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும் என்று மறைமகமாக உங்களை எச்சரிக்கும் அறிகுறி.
எனவே முடிவெடுப்பதில் நிதானமும் விவேகமும் தேவை.
சிவலிங்கத்தின் அருகே பாம்பைப் பார்த்து உங்களுக்கு பயம் ஏற்பட்டால், அது உங்கள் மனதில் இருக்கும் கவலைகள் அல்லது தீர்க்கப்படாத பதற்றங்களைக் குறிக்கிறதாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).