உடை எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதனை தொட்டுக்கூட பார்க்காதீங்க: பயங்கர எதிரியாம்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மயோனைஸ் ஒரு எதிரி என்றே கூறலாம். காரணம் அதில் அதிகப்படியாக கலோரி இருப்பதே.
சிக்கன், பர்கர், சாண்ட்விச் இந்த உணவுகளுடன் கொடுக்கப்படும் mayonnaise பிரியர்கள் அதிகமாகவே இருக்கின்றனர்.
இது முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய் , சர்க்கரை, உப்பு , எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப்படுவதாகும்.
அவ்வாறு தயார் செய்யப்படும் இதில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி ஆய்வு ஒன்றில், பிரிட்ஜில் வைத்து பராமரிக்கப்படும் இந்த மயோனைஸில் அதிகளவு கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்வதுடன் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது என்று தெரியவந்துள்ளது.
அதேபோல் எண்ணெய் பயன்படுத்தப்படுவது அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை கண்ணுக்கே தெரியாமல் அதிகரித்துவிடும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மயோனைஸ் எதிரி எனலாம்.
இதற்கு மாற்று வழி என்றால் குறைந்த கொழுப்பு கொண்ட மயோனைஸும் கிடைக்கின்றன. ஆனால் அது சுவை சற்று குறைவாக இருக்கும். இருந்தாலும் உடல் எடைக் குறைக்க நினைப்போருக்கு இது ஏற்றது. இருப்பினும் இதுவும் ஆபத்துதான் என்றே எச்சரிக்கின்றனர். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்போர் இதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.