தீவிர சிவபக்தர்! மாரடைப்புக்கு முன் பூஜையில் பங்கேற்ற மயில்சாமி: வெளிவந்த புகைப்படம்
தமிழ் திரைப்பட நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், பல்வேறு பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் மயில்சாமி உயிரிழப்பு
தமிழ் சினிமாவில் மிமிக்ரி கலைஞராக முதன் முதலில் அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த மயில்சாமி (57) இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையில் மயில்சாமி பங்கேற்றிருந்த நிலையில், அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மயில்சாமி உயிரிழந்துள்ளதுள்ளார்.
இதற்கிடையில் மாரடைப்பு காரணமாக மயில்சாமி உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவின் ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நடிகர் மயில்சாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 19, 2023
(2/2)
அத்துடன் கட்சி எல்லைகள் தாண்டி நட்பு பாராட்டியவர் என குறிப்பிட்ட தமிழிசை செளந்தரராஜன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என்று தெரிவித்துள்ளார்.
Your sweet funny ways will always be remembered dear Mayil. RIP. pic.twitter.com/i4eiQacNt9
— Vikram (@chiyaan) February 19, 2023
நடிகர் விக்ரம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உங்கள் இனிமையான வேடிக்கையான வழிகள் எப்போதும் நினைவில் இருக்கும் அன்பு மயில் என தெரிவித்துள்ளார்.
மனோபாலா
மழை, புயல், வந்தபோதெல்லாம் படகு எடுத்துட்டு உதவி பண்ண போயிருவாரு, பணம் சொன்னா, “என்னத்த கொண்டு வந்தோம், கொண்டு போகனு கேப்பாரு” என நடிகர் மனோபாலா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
நிறைய பேருக்கு அண்ணன் உதவி இருக்காரு, இது மிகப்பெரிய இழப்பு என்று நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
நடிகர் சார்லி
நடிகர் சார்லி கூறுகையில், 'நானும் மயில்சாமியும் முதல் சந்திப்பிலேயே நண்பர்கள் ஆகிவிட்டோம். தீவிர சிவ பக்தரான மயில்சாமி, சிவராத்திரி அன்றே மறைந்துவிட்டார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு' என தெரிவித்துள்ளார்.