வெளியில் வந்தவுடன் வேலையை ஆரம்பித்த மாயா: வனிதா வெளியிட்ட பதிவு
வெளியில் வந்த மாயா வனிதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் மாயா
விக்ரம் திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் தான் நடிகை மாயா.
இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் வரும் சிறிய காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து மாயா யார்? என்பதனை யூடியூபர்ஸ் தேட ஆரம்பித்து பேட்டியும் எடுத்துள்ளனர்.
இப்படியொரு நிலையில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் பிக்பாஸ். மக்களை என்டர்டைம் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற மாயா, வந்த வேலையை மறந்து பூர்ணிமாவுடன் சேர்ந்து போட்டியாளர்கள் மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தார்.
இதனால் மக்கள் மத்தியில் அதிகமான வெறுப்பை சம்பாரித்து பிக்பாஸ் சீசன் 7ல் 5ஆவது இடத்தை பிடித்து கொண்டார்.
வனிதா வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் வெளியில் வந்தவுடன் பிக்பாஸ் வீட்டில் தன்னோடு இருந்த பல பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், ஜோவிகாவை பார்ப்பதற்கு வனிதா வீட்டிற்கு சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வனிதா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருடன் இணைந்து கானா பாலா அவர்களும் சென்றிருக்கிறார். புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ வெளியில் வந்தும் உங்கள் வேலையை நிறுத்தவில்லையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |