நிறைய தவறு செய்திட்டோம்... கமல் சார் கேட்டால் காலில் விழுந்துடுவோம்! மாயா டீமின் மாஸ்டர் பிளான்
பி்க் பாஸ் நிகழ்ச்சியில் நாம் செய்த தவறுக்கு கமல் சாரிடம் எவ்வாறு சமாளிப்பது என்று கூட்டணி போட்டு மாயா டீம் பிளான் செய்து வரும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
மாயா இந்த வாரம் சர்வாதிகார தலைவராக இருந்து வருவதுடன், பிடிக்காத போட்டியாளர்கள் மீது கடுமையாக பழி போட்டு வருகின்றார்.
இந்நிலையில் தலைவராக இருக்கும் மாயா ஒரு டீம் வைத்துக்கொண்டு பல தவறுகளை செய்து வருகின்றார். வார இறுதியில் தவறுகள் குறித்து கமல் சார் கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற பிளான் போட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |