நான் தான் தந்தை! கடைசியில் ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணையகத்தில் அனைத்தையும் ஒப்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப்பாக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.

சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் முடித்துக் கொண்டதாக ஜாய் கிரிஸ்டில்டா சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.
“கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் மகளிர் ஆணையத்திலும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்த நிலையில் மகளீர் ஆணையகத்தில் புதன் கிழமை ஆஜராகி விசாரணையும் எடுக்கப்பட்டது.
இதற்கு தன் முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் வந்தது குறிப்பிட தக்கது. இதனை தொடர்ந்து தற்போது ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததை மாநில மகளிர் ஆணைய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார் என தகவல் வெளியாகி இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |